உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 13, 2021

அ நிறம் | அளவு
அதிக சப்தத்தில், இயர்போன்களை பயன்படுத்த வேண்டாம் என, ஆப்பிள் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்திருக்கிறது.இந்நிறுவனம், மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதை தெரிவித்துள்ளது. இயர்போனை அதிகம் பயன்படுத்தும், நான்கில் ஒருவருக்கு, காதுக்குள் வாரத்தில் பலமுறை இரைச்சல் சப்தம் கேட்பதாகவும்; இது காது கேட்காமல் போவதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
குறிப்பாக, கொரோனா பரவல் காலத்தில், அதிக நேரம், கூடுதலான சப்தத்தில், அதிகமானோர் இயர்போன்களை கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.மேலும், உலக சுகாதார நிறுவனம், 2050ல், 70 கோடி பேர் காது கேட்கும் தன்மையை இழந்துவிடும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளதையும், ஆப்பிள் மேற்கோள் காட்டி, எச்சரித்துள்ளது.
