தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஆப்பிளின் அட்டகாச அறிமுகங்கள்

ஆப்பிளின் அட்டகாச அறிமுகங்கள்

ஆப்பிளின் அட்டகாச அறிமுகங்கள்


PUBLISHED ON : அக் 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிள் நிறுவனம், ஐபோன் - 12 வரிசை போன்கள், துணை சாதனங்கள், மற்றும் ஆடியோ சாதனம் என பலவற்றை அறிமுகம் செய்திருக்கிறது.

ஐபோன் - 12

ஐபோன் - 12 சீரிஸ் போன்களை பொறுத்தவரை, ஐபோன் - 12 மினி, ஐபோன் - 12, ஐபோன் - 12 புரோ, ஐபோன் - 12 புரோ மேக்ஸ் ஆகிய போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் - 12 மினி, இந்த வரிசையில் சிறிதாகவும், சகாய விலையிலும் வந்திருக்கும் மாடலாகும். ஐபோன் - 12, இதற்கு முன் வந்த, ஐபோன் - 11 மாடலின் தொடர்ச்சியாகும்.

இதேபோல், ஐபோன் - 12 புரோ மற்றும் ஐபோன் - 12 புரோ மேக்ஸ் ஆகியவை, ஐபோன் - 11 புரோ மற்றும் ஐபோன் - 11 புரோ மேக்ஸ் ஆகியவற்றின் நீட்சியாகும். இந்த ஐபோன் - 12 மாடல் போன்கள் அனைத்தும், '5ஜி' தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் வகையில் வந்துள்ளன. ஐ.ஓ.எஸ்., 14 இயங்குதளத்தில் செயல்படும் இவை, ஆப்பிளின் ஏ14 பயோனிக் சிப் கொண்டவை.

விலை: ஐபோன் - 12 மினி: 69,900 ரூபாயில் துவங்குகிறது.

ஐபோன் - 12: 79,900 ரூபாயில் துவங்குகிறது.

ஐபோன் - 12 புரோ: 1,29,990 ரூபாயில் துவங்குகிறது.

ஐபோன் -12 புரோ மேக்ஸ்: 1,29,900 ரூபாயில் துவங்குகிறது.

ஹோம்பாடு மினி

இது, ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கராகும். 2017ல் முதன் முதலாக அறிமுகம் ஆன, ஹோம்பாடு சாதனத்தின் சிறிய மாடலாகும் இது. ஹோம்பாடு உடன் ஒப்பிடும்போது, இது அளவில் பாதியே இருக்கிறது. இதன் மேற்பகுதியில் தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை: 9,900 ரூபாய்

சிலிகான் உறை

ஆப்பிள் எட்டு வண்ணங்களில், சிலிகான் உறைகள் மற்றும் கிளியர் பிளாஸ்டிக் உறைகள் ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருக்கிறது. நவம்பர், 6ம் தேதியிலிருந்து விற்பனைக்கு வரும், தோல் உறையின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விலை: 4,900 ரூபாய்

மேக்சேப் சார்ஜர்

ஆப்பிள் நிறுவனம், மேக்சேப் சார்ஜர் மற்றும் மேக்சேப் டுயோ போல்டபிள் சார்ஜர் என, இரு ஒயர்லெஸ் சார்ஜர்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் டுயோ, ஆப்பிள் போன் மற்றும் ஆப்பிள் வாட்ச் இரண்டுக்குமானது ஆகும்.

ஒயர்லெஸ் சார்ஜரை பொறுத்தவரை, இது ஆப்பிளின் முதல் முயற்சியல்ல. ஏற்கனவே, 2017ல் எடுக்கப்பட்ட ஒன்று தான்.

மேக்சேப் சார்ஜரை சரியாகப் பயன்படுத்த உதவும் வகையில், ஆப்பிள் 12 சீரிஸ் போன்களின் பின்பகுதியில் காந்தம் உள்ளது. ஆப்பிள் மேக்சேப் டுயோவைப் பொறுத்தவரை விலை உள்ளிட்ட மற்ற விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விலை: 4,500 ரூபாய்

ஆப்பிள் வாலட்

ஆப்பிள் போனின் பின் பகுதியில், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ள வசதியாக, சிறிய வாலட் ஒன்றையும் அறிமுகம் செய்திருக்கிறது. நான்கு வண்ணங்களில் வந்துள்ளது இந்த வாலட்.

விலை: 5,600 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us