உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 13, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங்' துவங்கி, 'எல்.ஜி.,' வரை, அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் விரித்து மடிக்கக்கூடிய, 'போல்டபிள்' போன்களை அறிமுகம் செய்துவிட்டன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இன்னும் போல்டபிள் போனை அறிமுகம் செய்யாமல் இருப்பது, அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது.
இந்நிலையில், ஆப்பிளின் போல்டபிள் போன், 2023ம் ஆண்டில் அறிமுகம் ஆகும் என, தகவல்கள் வருகின்றன. இதற்கு முன், 2022ல் அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டது. இப்போது தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்த போனின் திரை, 8 அங்குல கியு.எச்.டி., 1,800x3,200 பிக்சல் கொண்டதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது, சாம்சங் தயாரிப்பான, 'கேலக்ஸி இசட் போல்டு 2' போனை விட, அதிக பிக்சல் துல்லியம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
