PUBLISHED ON : ஜன 22, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆப்பிள்' நிறுவனம், இரண்டாம் தலைமுறை 'ஹோம்பாட்' ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முந்தைய மாடலை விட, வடிவமைப்பிலும் ஆடியோ தரத்திலும் சற்று மேம்படுத்தப்பட்டு, இந்த புதிய ஹோம்பாட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இரு வண்ணங்களில் வந்துள்ளது. இரு ஹோம்பாடுகளை சேர்த்து, ஸ்டீரியோ வசதியை பெறலாம். 'சிரீ' வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி இருப்பதால் குரல் வழி உத்தரவுகளை வழங்கலாம். அதிகபட்சம் 6 நபர்களின் குரல்களை இந்த சாதனம் இனம் கண்டு கொள்ளும்.
புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு அலாரங்களை அவதானித்து, பயனர்கள் தொலைவில் இருக்கும்போது, அவர்களின் ஐபோன்களில் அதை அவர்களுக்குத் தெரிவிக்க முடியும்.
விலை: 32,900 ரூபாய்.

