உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 18, 2021

அ நிறம் | அளவு
'மைக்ரோசாப்ட்' நிறுவனம், செப்டம்பர் 22ம் தேதி நடைபெற இருக்கும் அதன், 'சர்பேஸ் ஹார்டுவேர்' நிகழ்ச்சியில், விண்டோஸ் 11ல் இயங்கும் பல சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சர்பேஸ் டுயோ 2' ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகலாம் என்ற கருத்து உலா வருகிறது. மேலும், 'சர்பேஸ் புக் 3' லேப்டாப்புக்கு அடுத்த மாடலையும் அறிமுகம் செய்யக்கூடும் என்றனர், துறையினர்.
ஆனால், நிகழ்ச்சியில் என்னென்ன சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்து, இன்னும் மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
