உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 31, 2021

அ நிறம் | அளவு
இந்தியாவை சேர்ந்த, ஆடியோ சாதன தயாரிப்பு நிறுவனமான, 'போல்ட்' (BOULT), புதிய ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. 'போல்ட் ஏர்பாஸ் இசட் 1' எனும் இந்த இயர்போன், 'ஸ்டெம்' மாடலில் வந்துள்ளது. கறுப்பு, வெள்ளை, நீலம் என மூன்று வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்புகாத வசதி கொண்டது. 'டச்' கன்ட்ரோல், மற்றும் குரல் வழி இயக்க வசதிகள் கொண்டிருக்கிறது. 'புளுடூத் வி5.0' இணைப்பு வசதி இருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், எட்டு மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் பேட்டரி இருக்கிறது.விலை: 1,599 ரூபாய்.
