உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 02, 2020

அ நிறம் | அளவு
'போட்' நிறுவனம், அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச்சை,'போட் ஸ்ட்ராம்' எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச், 9 விளையாட்டு மோடுகள் கொண்டது. மேலும், 100 விதமான வாட்ச் முக அமைப்பை, டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இதய துடிப்பு, மற்றும் ஆக்சிஜன் அளவுகளையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் கண்காணித்து அறிவிக்கும். உலோகத்தால் ஆனது இந்த ஸ்மார்ட்வாட்ச் என்பது, கூடுதல் சிறப்பு. அறிமுக சிறப்பு விலை, 1,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மின்னணு வர்த்தக தளங்களில், ஒரிஜினல் விலை, 5,990 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரிஜினல் விலை இது தான் என்றால், மார்க்கெட்டில் தாக்குப் பிடிப்பது சற்று கடினம் தான் என்கிறார்கள், சந்தை வல்லுனர்கள்.
