உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 16, 2021

அ நிறம் | அளவு
'நோக்கியா ஜி 50' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த போன் குறித்த பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியே கசிந்து வருகின்றன.
நோக்கியாவின் விலை குறைந்த 5ஜி போனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், 'ஆக்டோகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 480 பிராசஸர்' கொண்டிருக்கும் எனவும், 4 ஜி.பி., ரேம் கொண்டதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று கேமரா செட் - அப் உடன், பிரதான கேமரா 48 மெகா பிக்ஸல் திறன் கொண்டதாக இருக்கும் என்றனர். ஆண்ட்ராய்டு 11 மென்பொருள் கொண்டதாகவும், 64 ஜி.பி., சேமிப்புத்திறனுடன் வரும் என்றும் சொல்லப்படுகிறது. 5 ஜி போனான இது, 6.38 அங்குல திரை கொண்டதாகும்.
எதிர்பார்க்கப்படும் விலை: 19,800 ரூபாய்.
