தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/சிரமத்தை குறைக்கும் செயலிகள்

சிரமத்தை குறைக்கும் செயலிகள்

சிரமத்தை குறைக்கும் செயலிகள்


PUBLISHED ON : ஏப் 15, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த ஆண்டில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஆண்ட்ராய்டு செயலிகள் சிலவற்றை குறித்து பார்க்கலாம். சிலருக்கு, இப்படியான செயலிகள் இருப்பது கூட தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்காக ஐந்து செயலிகள்:

1. டச் ரீ டச்: போட்டோக்களை எடிட் செய்வது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இதற்காக பல செயலிகள் வந்திருந்தாலும், அவற்றை அறிந்து முழுமையாக பயன்படுத்துவதில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வாக வந்திருப்பது இந்த, டச் ரீ டச் செயலி. போட்டோக்களை எடிட் செய்வதில் உள்ள கஷ்டங்களை ஓரளவு இது குறைத்து விடுகிறது.தேவையற்ற கோடுகள், பிம்பங்கள் போன்றவற்றை மிக எளிதாக இதில் நீக்கிவிட முடியும். இந்த செயலியில், போட்டோஷாப் தரத்திலான சில உபகரணங்கள் இருப்பது கூடுதல் சிறப்பு.

2. செலக்ஷன்: ஒரு கட்டுரையில் உள்ள, நமக்கு தேவையான ஒரு சில வரிகளையோ; அல்லது பாராவையோ, இந்த செயலி மூலம் தேர்வு செய்து கொண்டால், அதை நம் நினைவூட்டலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.நமக்கு பிடித்த வரிகளை அல்லது, பாராவை தேர்வு செய்து, 'புட் இன் என்.சி.,' எனும் ஆப்ஷனை கொடுத்துவிட்டால், அந்த குறிப்பிட்ட வரி அல்லது பாரா நம் நோட்டிபிகேஷன் சென்டரில், 'பின்' ஆகிவிடும்.

3.சூப்பர் ஸ்டேட்டஸ் பார்: இந்த சூப்பர் ஸ்டேட்டஸ் பார், நம் நோட்டிபிகேஷன் பேனலை விருப்பப்படி மாற்றி அமைத்து கொள்ள உதவுவதுடன், சில 'ஷார்ட்கட்' களையும் அமைத்து கொள்ளலாம். மேலும் பிரைட்னஸ் அட்ஜஸ்ட், மீடியா வால்யூம் ஆகியவற்றையும் ஸ்டேட்டஸ் பாரில் கொண்டு வந்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு, 10க்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இதை பயன்படுத்தலாம்.

4. டச் லாக்கர்: பலருக்கு மிகவும் தேவைப்படும் செயலி இது. நாம் ஏதாவது சினிமாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தவறுதலாக, 10 நொடிகள் முன்னேயோ அல்லது பின்னாலோ நகர்த்தி விடுவோம். சில சமயம் படத்தின் துவக்கத்துக்கோ அல்லது முடிவுக்கோ கூட போய் விடுவோம். மீண்டும் பார்த்த இடத்திலிருந்து துவங்குவது கொஞ்சம் சவாலாகவே இருக்கும். சில மீடியா பிளேயர்களில் மட்டுமே, ஸ்கிரீனை லாக் செய்து கொள்ளும் வசதிஇருக்கும்.அப்படி வசதி இல்லாத நிலையில் இந்த, டச் லாக்கர் உதவிகரமாக இருக்கும். சிறிய தட்டுதலின் மூலம் எந்த இடையூறுகளும் இன்றி வீடியோக்களை நாம் பார்க்க முடியும்.

5. குயிக் கர்சர்: இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் அதன் டிஸ்பிளே அளவை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நாம் ஏதாவது ஒர் இணையத்தை பார்க்கும்போது, அது போனின் முழு திரையிலும் விரிகிறது.பார்க்க இது நன்றாக இருந்தாலும், ஒரு சிக்கல் இருக்கிறது. இணையத்தின் ஓரத்தில் இருக்கும் ஆப்ஷன்களை நம்மால், 'டச்' மூலம் கிளிக் செய்வது சிரமமாகிறது.இதை போக்கும் வகையில் வந்துள்ளது இந்த, குயிக் கர்சர். இதன் மூலம், போன் திரையின் ஓரத்தில் இருக்கும் இணையத்தின் ஆப்ஷன்களை கூட எளிதில் அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us