PUBLISHED ON : ஜூன் 02, 2021

உலகில் மிகவும் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசர் ஆக, கூகுள் நிறுவனத்தின், 'குரோம்' உள்ளது. கிட்டத்தட்ட, 325 கோடி பேர்களால் குரோம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் 41 சதவீதம் பேர் இந்த, குரோம் தேடுபொறியை பயன்படுத்துவதாகவும்; மொத்தம் இருக்கும் சாதனங்களில், 61 சதவீத சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
கூகுள் குரோமை, கடந்த 2018ம் ஆண்டில், ஒரு சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். அச்சமயத்தில், 'பயர்பாக்ஸ்' மற்றும், 'இன்டர்நெட் எக்ஸ்புளோரர்' ஆகியவை முன்னணியில் இருந்தன.
இருப்பினும், இந்த குறுகிய காலகட்டத்தில், மிகப் பெரிய வளர்ச்சியை பிடித்துள்ளது, கூகுள் குரோம். தற்போது குரோமை அடுத்து, இரண்டாவது இடத்தில், 'ஆப்பிள் சபாரி' உள்ளது. இருப்பினும், இதை, 94.4 கோடி பேர்தான் பயன்படுத்தி வருகிறார்கள். 'பயர்பாக்ஸ்' தேடுபொறியை, 18.1 கோடி பேரும்; 'மைக்ரோசாப்ட் எட்ஜ்' தேடுபொறியை, 17.1 கோடி பேரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
