உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 14, 2021

அ நிறம் | அளவு
கூகுள் நிறுவனம் அதன், 'பிக்சல்' போன் வரிசையில், 'போல்டபிள்' போனை அறிமுகம் செய்வதாக கூறி, நீண்ட காலமாகி விட்டது. ஆனால் போன் வரவில்லை. இதன் பிறகு, 2021ல் அறிமுகம் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனாலும், அரையாண்டு முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் அறிவிப்பு வந்தபாடில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசியில் அறிமுகம் ஆகலாம் என சொல்லப்படுகிறது. கூகுள் நிறுவனம், போல்டபிள் போன் விஷயத்தில் அவசரம் காட்டவில்லை என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சாம்சங் நிறுவனம், கூகுள், விவோ, சயோமி ஆகியவற்றின் போல்டபிள் போனுக்கான திரையை தயாரிக்க துவங்கி இருக்கிறது. இதையடுத்து, இம்மூன்று போல்டபிள் போனும், இந்த ஆண்டு கடைசியில் அறிமுகம் ஆக கூடும் எனக் கருதப்படுகிறது.
