உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 22, 2020

அ நிறம் | அளவு
இப்போது வரும்; அப்போது வரும் என்று சொல்லப்பட்டு வந்த, 'கூகுள் பிக்ஸல் 5' ஸ்மார்ட்போன், ஒருவழியாக, வரும் 30ம் தேதியன்று அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த போனுடன் புதிய குரோம்காஸ்ட் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகியவையும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
கூகுள் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து எதிர்பார்க்கப்படுபவை:
* 6 அங்குல ஓ.எல்.இ.டி., திரை
* 8 ஜி.பி., ரேம்
* 128 ஜி.பி., சேமிப்புத் திறன்
* இரட்டை கேமரா அமைப்பு
* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி
