தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கூகுளின் புதிய சேவை

கூகுளின் புதிய சேவை

கூகுளின் புதிய சேவை


PUBLISHED ON : ஜன 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூகுள் நிறுவனம், அதன், 'கூகுள் அசிஸ்டென்ட்' எனும் குரல் வழி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான மென்பொருளில், மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக, 'கெஸ்ட் மோடு' எனும் வாய்ப்பை புதிதாக சேர்த்துள்ளது.

இது, கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் சாதனங்களுக்கு மிகவும் பயன்படும். இந்த கெஸ்ட் மோடுக்கு சாதனத்தை மாற்றிவிட்டால், நமது தனிப்பட்ட தகவல்கள் எதையும் பிறருக்கு காட்டாது. காலண்டர் தகவல்கள், தொடர்புகள் என எதையும் பிறரால் அணுக முடியாது.

சாதனத்தை, கெஸ்ட் மோடுக்கு மாற்றுவதற்கு, பெரிதாக சிரமப்பட வேண்டியது இல்லை. 'ஹை கூகுள், டேர்ன் ஆன் கெஸ்ட் மோடு' என உத்தரவிட்டால் போதுமானது. பொதுவாக, கூகுள் நமது தனிப்பட்ட தகவல்களை, கூகுள் அசிஸ்டென்ட் மூலமாக காட்டாது. இருப்பினும், 'கூகுள் நெஸ்ட் ஹப்' போன்றவற்றை பயன்படுத்தும் போது, மற்றவர்கள் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பார்க்க முடியும் வாய்ப்பிருக்கிறது.

அத்துடன், ஸ்மார்ட் ஹோம் சர்வீஸ் செயலிகளில் இருக்கும் தகவல்களையும் பெற முடியும் என்பதால், இந்த ஏற்பாட்டை வழங்கி உள்ளது, கூகுள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us