உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 17, 2022

அ நிறம் | அளவு
'கூகுள்' நிறுவனத்தின் 'பிக்ஸல் பட்ஸ் புரோ' இம்மாதம் 28ம் தேதியன்று, இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தெரியவந்துள்ளது. 'பிக்ஸல் 6 ஏ' ஸ்மார்ட்போனுடன் இந்த 'பிக்ஸல் பட்ஸ் புரோ'வும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள் பிக்ஸல் புரோ இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகளில் அறிமுகம் ஆகிறது. இந்தியாவில் இருப்பவர்கள் இம்மாதம் 21ம் தேதி முதல் முன்பதிவு செய்துகொள்ள இயலும் என செய்திகள் வருகின்றன. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக கூகுள் நிறுவனம் எதுவும் அறிவிக்கவில்லை.
'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் கூடிய இந்த பிக்ஸல் பட்ஸ் புரோவின் விலை, தோராயமாக 15 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
