
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஐடெல்' நிறுவனம், இப்போது புதிதாக 'டேப்லெட்' பிரிவிலும்கால்பதித்துள்ளது. இதன் முதன் முயற்சியாக, 'ஐடெல் பேடு ஒன்' எனும், புதிய டேப்லெட் ஒன்றை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 'ரெட்மி பேடு, ரியல்மி பேடு மினி, மோட்டோ டேப் ஜி 60' போன்றவற்றுக்கு போட்டியாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
10.1 அங்குல எச்.டி., பிளஸ் திரை
மெட்டல் யுனிபாடி
சதுர வடிவ 5 எம்.பி., மெயின் கேமரா
முன்பக்கம் 8 எம்.பி., கேமரா
4 ஜி.பி.,+ 128 ஜி.பி.,
இரண்டு ஸ்பீக்கர்கள்
6,000 எம்.ஏ.எச்., பேட்டரி
10 வாட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன்
வைபை, புளூடூத் இணைப்பு
விலை: ரூ. 12,999