உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 24, 2021

அ நிறம் | அளவு
'அமேசான் பிரைம்' சேவைக்கான கட்டணம், இந்தியாவில் 50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க உள்ளது. அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் அமேசான் வீடியோ, அமேசான் மியூசிக், பிரைம் ரீடிங், பிரைம் கேமிங் மற்றும் அமேசான் தளத்தில் பொருட்களை வாங்குவதில் முன்னுரிமை மற்றும் சலுகை ஆகியவற்றை பெற்று வருகிறார்கள்.
தற்போது அமேசான் பிரைம் சேவைக்கான ஓராண்டு கட்டணம் 999 ரூபாயாக உள்ளது. இந்நிலையில், இந்த கட்டணம் விரைவில் 1,499 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.
இதேபோல், காலாண்டு திட்டத்தில் கட்டணம் 329 ரூபாயிலிருந்து 459 ரூபாயாகவும், மாதாந்திர திட்டத்தில் 129 ரூபாயிலிருந்து 179 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
