உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 12, 2022

அ நிறம் | அளவு
சமூக ஊடகமான 'இன்ஸ்டாகிராம்' அதில் இடம்பெறும் வீடியோ உள்ளிட்ட பதிவின் கால அளவை, 60 நொடியிலிருந்து, 90 நொடியாக அதிகரித்துள்ளது. மேலும், பதிவுகளுக்கான புதிய 'ஸ்டிக்கர்'களையும் அறிமுகம் செய்துள்ளது.
இது மட்டுமின்றி, உபயோகிப்பாளர்கள் இந்த பதிவுகளின் பின்புலத்தில், தங்களுடைய சொந்த ஆடியோவையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக சொந்த ஆடியோவை பதிவுகளில் இறக்கிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், பல்வேறு பின்னணி சப்தங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், குழந்தைகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க உதவியாக, 'ஆம்பர் அலெர்ட்' வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
