தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'ஸ்பாட்டிபை கார் திங்' புதிய சாதனம் அறிமுகம்

'ஸ்பாட்டிபை கார் திங்' புதிய சாதனம் அறிமுகம்

'ஸ்பாட்டிபை கார் திங்' புதிய சாதனம் அறிமுகம்


PUBLISHED ON : ஏப் 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாடல்களுக்கான செயலிகளில் ஒன்றான, 'ஸ்பாட்டிபை' உலகநாடுகளில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது, 'ஸ்பாட்டிபை கார் திங்க்' எனும் ஒரு சாதனைத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

காரில் செல்லும்போது, நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பாட்டிபை செயலியை, கார் ஆடியோ சிஸ்டத்துடன், புளுடூத் வாயிலாக இணைத்து கேட்டு வருகிறோம். காரில் செல்லும் போது, ஸ்பாட்டிபையை எளிதாக அணுக, கார் மோடு எனும் வசதியும் உள்ளது.

இருப்பினும், நம்முடைய போனை பயன்படுத்தியே பாடல் தேர்வு உள்ளிட்டவற்றை செய்ய வேண்டியதாக இருக்கிறது. இந்த குறையை நீக்கும் வகையில், புதிதாக ஸ்பாட்டிபை கார் திங்க் சாதனம் அறிமுகம் ஆகிறது. இந்த சாதனம் இருக்கும்பட்சத்தில், நாம் மொபைல் போன் போனை பயன்படுத்தாமல், ஸ்பாட்டிபையின் சேவைகள் அனைத்தையும் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த சாதனத்தை குரல் வழி உத்தரவுகள் மூலமாகவும் இயக்க முடியும். இதை காரின் முன்பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் எளிதாக பொருத்திக் கொள்ளலாம். இந்த வசதியை பெறுவதற்கு பிரிமியம் மெம்பர்ஷிப் வைத்திருக்க வேண்டும்.

முதற்கட்டமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே, சோதனை முயற்சிக்காக, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம், 3.97 அங்குலம் திரை கொண்டதாகும். விலை கிட்டத்தட்ட, 6,000 ரூபாயாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us