உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 27, 2022

அ நிறம் | அளவு
அண்மையில் ஆப்பிளின், 'ஐ.ஓ.எஸ்., 15.4' அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதை பதிவிறக்கம் செய்த ஐபோன்களில், 'பேட்டரி சார்ஜ்' வேகமாக இறங்கி விடுவதாக, நுகர்வோர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொரோனா தடுப்புக்காக முக கவசம் அணிந்திருக்கும் நிலையிலும், முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில், மேம்படுத்தப்பட்ட பேஸ் ஐ.டி., உள்ளிட்ட ஏகப்பட்ட மேம்பாடுகளுடன் ஐ.ஓ.எஸ்., 15.4 அறிமுகம் செய்யப்பட்டது.
இருப்பினும், சில பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்த பின், பேட்டரி நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். இதற்கு முன், ஐ.ஓ.எஸ்., 15 அறிமுகம் செய்யப்பட்டபோதும், இதேபோன்ற புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
