உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 12, 2021

அ நிறம் | அளவு
ஜப்பானைச் சேர்ந்த, 'தைவா' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு டிவியை அறிமுகம் செய்து உள்ளது. தைவா டி.50 யு.1டபுள்யு. ஓ.எஸ்., எனும் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிவி, எல்.ஜி., வெப் ஓ.எஸ்., டிவி தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் 4கே டிவி என்கிறது, தைவா நிறுவனம். எல்.ஜி., ஓ.எஸ்., உடன், திங்க்யு ஏ.ஐ., தொழில்நுட்பமும் இந்த டிவியில் உள்ளது. அத்துடன், மேஜிக் ரிமோட்டும் உள்ளது.
இந்த டிவி, 50 அங்குல அளவில் வந்துள்ளது. இதில், 1.5 ரேமும், 8 ஜி.பி., சேமிப்பகமும் உள்ளது.
விலை: 43,999 ரூபாய்
