PUBLISHED ON : நவ 11, 2020

ஒருகாலத்தில் ஓஹோ என்று இருந்த, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறது.மைக்ரோமேக்ஸ் அதன்,'இன்' வரிசையில், புதிதாக,'மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1' மற்றும், 'மைக்ரோமேக்ஸ் இன் 1பி' என, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
'மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1' போன், பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் வந்துள்ளது. இம்மாதம், 24ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். மூன்று வண்ணங்களில் அறிமுகம் ஆகியிருக்கும், 'மைக்ரோமேக்ஸ் இன் 1 பி', இம்மாதம், 26ம் தேதி முதல் கிடைக்கும்.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1:
6.67 அங்குல திரை
ஆண்ட்ராய்டு 10
48 எம்.பி., முதன்மை கேமரா
128 ஜி.பி., சேமிப்பகம்
யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்
5,000 எம்.ஏ.எச். பேட்டரி
விலை: 4ஜி.பி., + 64 ஜி.பி.,: 10,999 ரூபாய்
4ஜி.பி., + 128 ஜி.பி.,: 12,499 ரூபாய்
மைக்ரோமேக்ஸ் இன் 1பி:
6.52 அங்குல திரை
2ஜி.பி., 4 ஜி.பி., ரேம் வாய்ப்பு
32 ஜி.,பி., 64 ஜி.பி., சேமிப்பகம்
13 எம்.பி., முதன்மை கேமரா
யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்
5,000 எம்.ஏ.எச். பேட்டரி
விலை: 2ஜி.பி., + 32 ஜி.பி.,: 6,999 ரூபாய்
4ஜி.பி., + 64 ஜி.பி.,: 7,999 ரூபாய்
