தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'நோக்கியா'வின் புதிய வரவுகள்

'நோக்கியா'வின் புதிய வரவுகள்

'நோக்கியா'வின் புதிய வரவுகள்


PUBLISHED ON : அக் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'நோக்கியா'வின் பட்ஜெட் போன்களான, 225 - 4ஜி மற்றும் 215 - 4ஜி ஆகியவை, இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளன. அண்மையில், சீனாவில் அறிமுகமான நிலையில், இப்போது இந்தியாவுக்கும் வந்துள்ளன. இந்த இரண்டு போன்களும் பியூச்சர் போன்களாகும்.

இந்த இரு போன்களும் 4ஜி எல்.டி.இ., சேவையில் செயல்படக்கூடியவை. மற்றபடி வழக்கமான, எப்.எம்., ரேடியோ, பிளாஷ்லைட், புளூடூத், எம்.பி., 3 பிளேயர், கழட்டும் வகையிலான பேட்டரி, 'டி9' கீ - போர்டு போன்ற வசதிகளை கொண்டிருக்கின்றன. மேலும், 32 ஜி.பி., வரை சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 24 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும்.

இந்த இரு போன்களுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம், நோக்கியா 215 - 4ஜி போனில் கேமரா கிடையாது என்பது மட்டுமே.

விலை: நோக்கியா 215 - 4ஜி: ரூ.2,949

நோக்கியா 225 - 4ஜி: ரூ.3,499

நோக்கியா, இந்த பியூச்சர் போன்களுடன் கூடவே ஹெட்போன் ஒன்றையும், உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த, 'நோக்கியா எஸென்ஷியல் ஒயர்லெஸ் ஹெட்போன்', 40 எம்.எம்., டைனமிக் டிரைவர்களுடன் வந்துள்ளது. 5.0 புளுடூத் இணைப்பு வசதி கொண்டது. ஒயர்லெஸ் ஹெட்போன் எனினும், 3.55 எம்.எம்., ஆடியோ ஜேக் வசதி இருப்பதால் ஒயர் மூலம் இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். சார்ஜ் ஏற்றுவதற்கு, மைக்ரோ யு.எஸ்.பி., கொடுக்கப்பட்டுள்ளது.

500 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பதால், 40 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். குரல்வழி உத்தரவுகள் கொடுக்க, கூகுள் அசிஸ்டென்ட், சிரி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் எடை 197 கிராம்.

விலை: 5,100 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us