உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2021

அ நிறம் | அளவு
'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில் புதிய ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.'லாஜிடெக் ஜி 335' எனும் இந்த ஹெட்போன், ஒயர் உடன் கூடியதாகும். இது ஒரு கேமிங் ஹெட்போனும் கூட. இதற்கு முந்தைய,'லாஜிடெக் ஜி 733' ஹெட்போனை விட இது, எடை மிகவும் குறைவானது. 240 கிராம் எடை கொண்டது.கறுப்பு, வெள்ளை என, இரு வண்ணங்களில் இந்த ஹெட்போன் வந்து உள்ளது. 40 மி.மீ., 'நியோடைமியம்' டிரைவர்கள் கொண்டுள்ளது. இந்த ஹெட்போன், அமெரிக்காவில் கடந்த மாதம் அறிமுகம் ஆனது.விலை: 6,795 ரூபாய்.
