உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 20, 2020

அ நிறம் | அளவு
நோக்கியாவின் புதிய லேப்டாப், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'நோக்கியா பியூர்புக் எக்ஸ் 14' எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது, இந்த லேப்டாப்.நோக்கியா பிராண்டின் இந்த முதல் லேப்டாப்பில், இண்டெல் 10வது தலைமுறை பிராசஸரும், விண்டோஸ் 10 இயங்கு தளமும் உள்ளன.
சற்று பெரிதான, டச் ஸ்கீரின் பேடும் இதில் உள்ளது. கறுப்பு வண்ணத்தில் வந்துள்ளது. 14 அங்குல முழு எச்.டி. திரை, டால்பி விஷன் வசதியுடன் இருக்கிறது. டால்பி அட்மோசை சப்போர்ட் செய்யும்.ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், எட்டு மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்கிறது நோக்கியா. இதற்கேற்ப, 65 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் எடை 1.1 கிலோ எடை மட்டுமே.
