உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 14, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங்' நிறுவனத்துக்கு சொந்தமான, ஜே.பி.எல்., அதன், 'குவாண்டம் கேமிங் ஹெட்செட்' வரிசையில், புதிதாக, 'குவாண்டம் 350' எனும் ஒயர்லெஸ் கேமிங் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. குவாண்டம் சர்ரவுண்டு தொழிநுட்பம் கொண்ட இந்த ஹெட்போன், 40 எம்.எம்., டிரைவர்கள் கொண்டது. இதன் எடை 252 கிராம்.
இந்த ஹெட்போனை, யு.எஸ்.பி., டோங்கில் வாயிலாக கம்ப்யூட்டருடன் ஒயர்லெஸ் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதில் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளும் வகையிலான, 'பூம்' மைக் இருப்பதால், இந்த மைக்கை தனியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 22 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே, ஒரு மணி நேரம் பயன்படுத்தலாம். இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் இதன் விலை, அமெரிக்காவில் 7,200 ரூபாய் ஆகிறது.
