sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

நிஜமும் நிழலும்

/

நிஜமும் நிழலும்

நிஜமும் நிழலும்

நிஜமும் நிழலும்


PUBLISHED ON : பிப் 17, 2019

Google News

PUBLISHED ON : பிப் 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மைக்ரோசாப்ட்' நிறுவனம், அதன் புதிய, 'ஹோலோ லென்ஸ் - 2' சாதனத்தை, விரைவில் அறிமுகம் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 2015ம் ஆண்டில், முதன் முதலாக ஹோலோ லென்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மைக்ரோசாப்ட். இப்போது, அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட இருக்கிறது.

சரி, அது என்ன ஹோலோ லென்ஸ்?

சிம்பிளாக சொல்வதென்றால், தலை கவசம் போன்ற ஒரு கணினி இது. இதிலுள்ள செயலி மூலம், கண்ணெதிரே முப்பரிமாண உருவங்களை காணலாம்; கைகளால் அவற்றை இயக்கலாம். ஆனால், தொட்டு உணர முடியாது. நிஜமும் நிழலும் இணைந்த ஒன்றான இது, 'விண்டோஸ் - 10' மூலம் இயங்கும். டிஜிட்டல் வடிவங்கள், நிஜ பொருட்களாக கண் முன் தோன்றும்.

வீடு, பைக், கார் போன்றவற்றை டிசைன் செய்யும் போது, நிஜத்தில் எப்படி இருக்கும் என்பதையும் சேர்த்தே பார்த்து செயல்படலாம். இன்னும் சொல்வதென்றால், நம் கற்பனையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு சாதனம், அவ்வளவு தான்.

ஹோலோ லென்ஸ் - 2ல் என்னென்ன புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சந்தைக்கு வந்தால் சங்கதி தெரிந்து விடும்.






      Dinamalar
      Follow us