உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 02, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8' இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகிவிடும் என தெரிகிறது. 'அமேசான்' தளத்தில் இதற்கான 'மைக்ரோசைட்' தற்போது இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, விரைவில் இந்த டேப்லெட் அறிமுகமாகி விடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த டேப்லெட், 10.5 அங்குல டி.எப்.டி., திரை கொண்டதாகும். நான்கு ஸ்பீக்கர் செட் - அப் உடன், 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் வசதியும் இது கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த டேப்லெட் 7,040 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும். மேலும், 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்.
விலை உள்ளிட்ட இதர தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
