
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில், 'ஒன் மோர்' நிறுவனம் அதன் புதிய புளுடூத் இயர்போனை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், சிறப்பான தரத்துக்காக, உலக புகழ் பெற்ற கிராமி விருது பெற்ற தயாரிப்பாளர், சவுண்டு இன்ஜினியர் லுகா பிக்னார்டியுடன் கூட்டு வைத்துள்ளது.
இந்த புதிய, 'ஒன் மோர் ஸ்டைலிஷ் டூயல் டைனமிக் டிரைவர் ஒயர்லெஸ் இயர்போன்' மிகச் சிறந்த இசை அனுபவத்தை தரக்கூடியது என்கிறது தயாரிப்பு நிறுவனம்.
இதில் உள்ள, '3சி பேட்டரி' மற்றவற்றை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் சார்ஜ் ஏறக்கூடியது. 10 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் மூன்று மணிநேரம் பாடல்களை கேட்கலாம்.
இதன் விலை ரூ.7,499. ஒன் மோர் நிறுவனத்தின் இந்திய வலைதளத்தில், 5,499 ரூபாய்க்கு சலுகை விலையில் கிடைக்கிறது.

