உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 21, 2022

அ நிறம் | அளவு
'கேமிங் மானிட்டர்' வரிசையில், புதிதாக இரண்டு மானிட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, 'பிலிப்ஸ்' நிறுவனம். 'பிலிப்ஸ் மொமென்டம் 3,000' எனும் பெயரில், இந்த மானிட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மிக மெலிதாகவும், எடை குறைவாகவும் உள்ளன இந்த மானிட்டர்கள்.
மேலும் முழு எச்.டி., ஐ.பி.எஸ்., டிஸ்ப்ளே பேனல், 165 ஹெசர்ட்ஸ் 'ரீபிரஷ் ரேட்' ஆகியவற்றுடன் கூடிய இந்த மானிட்டர்கள், புதிய கேமிங் அனுபவத்தை வழங்கும் என்கிறது, பிலிப்ஸ். இந்த மானிட்டர்கள், 27 அங்குலம் மற்றும் 23.8 அங்குலம் ஆகிய அளவுகளில் வந்துள்ளன. 27 அங்குல மானிட்டரின் விலை 22 ஆயிரத்து, 799 ரூபாய். 23.8 அங்குலம் மானிட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
