PUBLISHED ON : செப் 04, 2020

சோனி எக்ஸ்பீரியா 8 லைட் ஸ்மார்ட்போன், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சோனி எக்ஸ்பீரியா 10 போனை போலவே உள்ளது. கிட்டத்தட்ட வடிவமைப்பு வரை ஒன்று போலவே இருக்கிறது.
இரண்டு போன்களுக்கும் ஏதாவது பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்றால், அது பின்பக்க கேமரா தான். எக்ஸ்பீரியா 8 லைட் போனில், கைவிரல் ரேகை சென்ஸார் பக்கவாட்டில் இருக்கிறது. பிரதான கேமரா, 12 எம்.பி., கொண்டதாகும். திரையை பொறுத்தவரை, 6 அங்குல முழு எச்.டி., எல்.சி.டி., திரையாகும். 4ஜி.பி., + 64 ஜி.பி., சேமிப்பு திறன் கொண்டுள்ளது. தேவைப்பட்டால், 512 ஜி.பி., வரை சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளலாம்.மேலும், 2870 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடன், யு.எஸ்.பி., டைப் சி போர்ட் கொண்டுள்ளது. இந்த போனின் விலை, இந்திய மதிப்பில், 20,800 ரூபாய் ஆகிறது.
