தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'வாட்ஸ் ஆப்' தரும் வசதி

'வாட்ஸ் ஆப்' தரும் வசதி

'வாட்ஸ் ஆப்' தரும் வசதி


PUBLISHED ON : ஜூலை 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இனி, 'வாட்ஸ் ஆப் சாட் ஹிஸ்டரி' முழுவதையும், 'ஆண்ட்ராய்டு' போனிலிருந்து 'ஐபோனு'க்கோ அல்லது ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கோ எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என, வாட்ஸ் ஆப் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன் 'பீட்டா' உபயோகிப்பாளருக்கு மட்டுமே என்று இருந்தது, இப்போது பொதுவாகி உள்ளது. இதன் வாயிலாக, நமது கணக்கு தகவல்கள், 'புரொபைல்' படம், குழு உரையாடல்கள், சாட் ஹிஸ்டரி, 'மீடியா செட்டிங்ஸ்' என அனைத்தையும், மற்றொரு போனுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

ஐபோன் எனில், ஐ.ஓ.எஸ்., 15.5 அல்லது அதற்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு எனில், 5.0 அல்லது அதற்கு மேம்பட்டது தேவை. மேலும், ஆண்ட்ராய்டு எனில், வாட்ஸ் ஆப் 'வெர்ஷன்' 2.22.7.74 அல்லது அதற்கு பிறகானது தேவை. அதேபோல், ஐபோன் எனில் 2.22.10.70 அல்லது அதற்கு பிறகானது தேவை.

இறுதியாக, அதே போன் நம்பரை பயன்படுத்த வேண்டும். இரண்டு போனும் ஒரே 'வைபை நெட்வொர்க்'கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்பிறகு, வாட்ஸ் ஆப் தளத்தில், 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதிக்கு சென்று, அதன் வழிகாட்டலின்படி நடந்து கொள்ள வேண்டும்.

பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us