தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/முத்தான மூன்று 'இயர்பட்ஸ்'

முத்தான மூன்று 'இயர்பட்ஸ்'

முத்தான மூன்று 'இயர்பட்ஸ்'


PUBLISHED ON : செப் 06, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல டேனிஷ் பிராண்டு ஆன, 'ஜாப்ரா', மூன்று புதிய இயர்பட்ஸ்களை, உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 'ஜாப்ரா எலைட் 7 புரோ, எலைட் 7 ஆக்டிவ், எலைட் 3' என மூன்று வகையான, ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து உள்ளது.

இவற்றில், ஜாப்ரா எலைட் 7 புரோ மாடல், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' எனும், வெளிப்புற சப்தங்களை மட்டுப்படுத்தும் வசதியுடன் வந்துள்ளது. மேலும், இதுவரை வந்த ஜாப்ரா தயாரிப்புகளில் இதுதான் அளவில் மிகவும் சிறியதாகும்.

எலைட் 7 ஆக்டிவ், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்யும்போது கீழே விழுந்துவிடாத வகையில், இறுகப் பற்றிக்கொள்ள ஏதுவாக, 'இயர்டிப்ஸ்' ஆனது, 'லிக்யுட் சிலிக்கான்' ரப்பரால் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்றில் எலைட் 3 விலை குறைவானதாகும். இதன் பேட்டரி 7மணி நேரம் தாக்குப்பிடிக்கும். இதை வைத்துக்கொள்ளும் கேஸ் உடன் சேர்த்து, மொத்தம் 28 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் இவை எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தோராயமான விலை:

எலைட் 7 புரோ: 14,500 ரூபாய்.

எலைட் 7 ஆக்டிவ்: 13,100 ரூபாய்.

எலைட் 3: 5,800 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us