உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2021

அ நிறம் | அளவு
'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் 'சர்பேஸ் கோ 3' டேப்லெட், இந்தியாவில், 'விண்டோஸ் 11' உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ, சர்பேஸ் புரோ 8, சர்பேஸ் கோ 2' ஆகியவை கடந்த செப்டம்பரில் அறிமுகம் ஆன நிலையில், இப்போது, 'சர்பேஸ் கோ 3' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது சர்பேஸ் கோ 2ன் மேம்படுத்தபட்ட மாடல் ஆகும் என்கிறார்கள். 10வது தலைமுறை 'இன்டெல் கோர் ஐ3' பிராசஸருடன் வந்திருக்கும் இது, 60 சதவீதம் அதிகமான வேகம் கொண்டிருக்கும் என்கிறார்கள். இன்டெல் பெண்டியம் கோல்டு பிராசஸர், 8 ஜி.பி + 128 ஜி.பி., கொண்ட சர்பேஸ் கோ 3 விலை 57,999 ரூபாய்.
முன்பதிவு செய்து வாங்குபவர்களுக்கு 9,699 ரூபாய் மதிப்பிலான, 'சர்பேஸ் பென்' இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
