உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 28, 2021

அ நிறம் | அளவு
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், ஜெப்பிட் 7220சி.எச்., எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 1.7 அங்குல திரையுடன் வந்துள்ளது.
தொலைபேசி அழைப்புகளை நேரடியாக இந்த வாட்ச் வாயிலாகவே ஏற்கலாம். இதற்காக இந்த வாட்சினுள்ளே ஸ்பீக்கரும், மைக்கும் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச், 7 'ஸ்போர்ட் மோடு'களுடனும் பல்வேறு ஆரோக்கிய பராமரிப்பு அம்சங்களுடனும் வந்துள்ளது. மேலும், 210 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடன், 30நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சார்ஜ் ஏற்ற, ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் போதுமானது. மொத்தத்தில் போனை நேரம் பார்க்கவும், வாட்சை போன் செய்யவும் பயன்படுத்தும் காலமாகிவிட்டது.
அறிமுக விலை: 3,999 ரூபாய்.
