தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!


PUBLISHED ON : ஜன 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாட்ஸ்ஆப்பில், நம்முடைய புரோபைல் படத்தை எப்படி மறைப்பது?

நம் சுயவிபர படங்களை மற்றவர்கள் எளிதாக, 'ஸ்கிரீன்ஷாட்' மூலம் எடுத்துக்கொள்ள முடியும். அதை அவர்கள் தவறாகவும் பயன்படுத்த முடியும். இப்போது வாட்ஸ்ஆப்பை உரையாடல்களுக்கு மட்டுமின்றி, பணப்பரிவர்த்தனை செய்வது வரை அதை பயன்படுத்துகிறோம்.

நம் படத்தை அவ்வாறு பிறர், 'ஸ்கிரீன்ஷாட்' எடுக்காமல் தடுக்க முடியுமா?

ஒரு வாய்ப்பு இருக்கிறது. நம் படத்தை மறைத்துவிடலாம்.எப்படி சுயவி வர படங்களை மறைப்பது?

* 'வாட்ஸ் ஆப்'பை ஓப்பன் செய்யுங்கள்

* செட்டிங்ஸ்' சென்று, 'அக்கவுன்ட்' பிரிவுக்கு சென்று, அங்கிருந்து, 'பிரைவசி' பகுதிக்குள் நுழையுங்கள்

* அங்கு உள்ள, 'ஆப்ஷன்' பட்டியலில், பொதுவாக, 'எவ்வரிஒன்' என இருக்கும்.

* நம் சுயவிபரப் படம், நம் கான்டாக்ட்ஸ் லிஸ்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டும் எனில், 'மை கான்டாக்ட்ஸ்' என்பதை தேர்வு செய்யுங்கள்

* யாருக்குமே படம் தெரிய வேண்டாம் எனில், 'நோபடி' என்பதை தேர்வு செய்யுங்கள்.

ஒருத்தருக்குமே படம் தெரிய வேண்டாம் எனில், அதில் ஏன் படத்தை வைக்க வேண்டு என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

இப்போதைக்கு, ஒன்று நம் கான்டாக்ட்ஸ் லிஸ்ட் இருப்பவர்களுக்கு மட்டும் தெரியும்; அல்லது, ஒருவருக்கும் தெரியாது என, இரு வாய்ப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நபருக்கு மட்டும் தெரிய வேண்டாம் என, மறைப்பதற்கான வசதி இன்னும் வரவில்லை.

அப்படி யாரையாவது விலக்க வேண்டும் என நினைத்தால், அந்த நபரது எண்ணை, நம் வாட்ஸ் ஆப் கான்டாக்ட் லிஸ்டில் இருந்து நீக்கி கொள்வது தான், தற்போதிருக்கும் ஒரே வழி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us