உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 05, 2020

அ நிறம் | அளவு
சோனி நிறுவனம்,'பிரேவியா எக்ஸ் 9000எச்' வரிசையில், இரண்ஊ எல்.இ.டி., 4கே ஆண்ட்ராய்டு டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த டிவி,'ஆப்பிள் எர்பிளே2' மற்றும் 'ஹோம்கிட்' ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.விரைவில் வரவிருக்கும், 'பிளேஸ்டேஷன் 5' விளையாட்டுகளை விளையாடுவதற்கு உகந்த வகையில், ஒரு நொடிக்கு, 120 பிரேம் மற்றும், 4 கே திரை கொண்டதாகவும் இந்த டிவி உள்ளது.
இந்த டிவியின் 65 அங்குல மாடல், சோனி அக்கோஸ்டிக் மல்டி ஆடியோவை சப்போர்ட் செய்யும். இதற்காக டிவி திரையின் பின்பகுதியில் கூடுதலாக இரு ஸ்பீக்கர்கள் உள்ளன.இந்தியாவில் இந்த டிவி 55 அங்குலம், 65 அங்குலம் என இரு அளவுகளில் கிடைக்கிறது.விலை: 55 அங்குலம்: 1, 09,990 ரூபாய்65 அங்குலம்: 1,59,990 ரூபாய்
