PUBLISHED ON : ஏப் 24, 2022

'சாம்சங் கேலக்ஸி எம்.53 5ஜி' ஸ்மார்ட்போன், கடந்த வெள்ளிஅன்று, இந்தியாவில் அறிமுகம் ஆகிவிட்டது.
நாட்டில், விரைவில் 5ஜி இணைப்பு வசதி வந்துவிடும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், கூடவே, 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த ஆர்வமும் மக்களிடம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையை சரியாக பயன்படுத்தும் விதமாக, சாம்சங், தன்னுடைய 5ஜி போன் வரிசையில், புதிதாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நீலம் மற்றும் பச்சை என இரு வண்ணங்களில் வந்துள்ளது. 29ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
* ஆண்ட்ராய்டு 12
* இரண்டு நானோ சிம்
* 6.7 அங்குல முழு எச்.டி., திரை
* சூப்பர் அமோல்டு பிளஸ் டிஸ்ப்ளே
* 6, 8 ஜி.பி., ரேம்
* நான்கு கேமரா செட் அப்
* 108 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
* 128 ஜி.பி., சேமிப்பகம்
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை:
6 ஜி.பி., + 128 ஜி.பி., : 23,999 ரூபாய்
8 ஜி.பி., + 128 ஜி.பி., : 25,999 ரூபாய்
