உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 10, 2021

அ நிறம் | அளவு
'இன்ஸ்டாகிராம்' இனி வெறுமனே போட்டோக்களை பதிவிடும் ஒரு செயலியாக இருக்க முடியாது என, அதன் தலைமை அதிகாரி ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். ஆனால் அதேசமயம், வீடியோ பகிர்தலில் அதிக வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக, வீடியோவை முழு திரையில் காணும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றிலும், பல மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'டிக்டாக், யு டியூப்' போன்றவை கொடுக்கும் நெருக்கடியின் காரணமாக, வீடியோ பகிர்தலில் அதிக கவனம் எடுக்க முடிவு செய்திருக்கிறது இன்ஸ்டாகிராம் என்கிறார்கள் துறையினர்.
