PUBLISHED ON : ஆக 21, 2022

செல்போனில் நேரம் பார்க்கும் வசதி வரவும், கைகளில் வாட்ச் கட்டும் போக்கு மக்களிடையே மிகவும் குறைந்து போனது. ஆனால், ஸ்மார்ட் போன் அறிமுகமாகி, அதன் பின் ஸ்மார்ட் வாட்சுகளும் அறிமுகம் ஆகவும், இப்போது ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, உலகளவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகம் ஆகி வருகின்றன. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. போட்டி போட்டுக்கொண்டு, பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த வரிசையில், 'இன்பேஸ்' நிறுவனமும், இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்சு களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 'இன்பேஸ் அர்பன் புரோ எக்ஸ் மற்றும் அர்பன் புரோ 2' எனும் இரண்டு வாட்சுகளை, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அர்பன் புரோ எக்ஸ்
* 1.8 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே
* 100 வகை முகப்புகள்
* 4 பில்டு இன் கேம்கள்
* 5.0 புளூடூத் தொழில்நுட்பம்
* புளூடூத் காலிங் வசதி
* உடல் நல கண்காணிப்புகள்
* 5 நாட்கள் தாங்கும் பேட்டரி
விலை: 2,799 ரூபாய்
அர்பன் புரோ 2
* 1.7 அங்குல எல்.சி.டி., திரை
* எச்.டி., மைக்ரோபோன்
* ப்ளூடூத் 5.0 சப்போர்ட்
* எச்.டி., மைக்ரோபோன்
* 100 வகை முகப்புகள்
* உடல் நல கண்காணிப்புகள்
* 120க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடு
* கால்குலேட்டர்
* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
விலை: 2,499 ரூபாய்
