தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/வந்தாச்சு 'விண்டோஸ் 11'

வந்தாச்சு 'விண்டோஸ் 11'

வந்தாச்சு 'விண்டோஸ் 11'


PUBLISHED ON : ஜூன் 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மைக்ரோசாப்ட்' நிறுவனம் விரைவில், 'விண்டோஸ் 11' இயங்குதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மென்பொருளை, 'விண்டோஸ் 10' பயனருக்கு மட்டுமின்றி; 'விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1' ஆகியவற்றை பயன்படுத்துபவர்களும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

இதன் மூலம்,'விண்டோஸ் 11' இயங்குதளத்தை, பரந்துபட்டவர்களுக்கு விரிவுபடுத்துவதுடன், அனைவருக்கும் பாதுகாப்பான பயன்பாட்டை வழங்கவும், 'மைக்ரோசாப்ட்' திட்டமிட்டுள்ளது.

'விண்டோஸ் 10' இயங்குதளத்தை அறிமுகம் செய்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு, 'விண்டோஸ் 11' அறிமுகம் ஆகியுள்ளது. இதில் 'ஸ்டார்ட் மெனு' இடது ஓரத்தில் இருப்பதற்கு பதிலாக, மத்தியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சவுண்டுகள், அலர்ட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'வாய்ஸ் டைப்பிங்' போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.

'விண்டோஸ் 11' இயங்குதளத்தை இலவசமாக பெறலாம் எனபது கூடுதல் சிறப்பு. 'விண்டோஸ் 8' வைத்திருப்பவர்கள் கூட, 'விண்டோஸ் 8.1' இயங்குதளத்துக்கு மாறி, அதன் பிறகு, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us