/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சிவபாலனின் ஓவியங்களில் தத்ரூபமாக துள்ளுகின்றன ஜல்லிக்கட்டு காளைகள்!
/
சிவபாலனின் ஓவியங்களில் தத்ரூபமாக துள்ளுகின்றன ஜல்லிக்கட்டு காளைகள்!
சிவபாலனின் ஓவியங்களில் தத்ரூபமாக துள்ளுகின்றன ஜல்லிக்கட்டு காளைகள்!
சிவபாலனின் ஓவியங்களில் தத்ரூபமாக துள்ளுகின்றன ஜல்லிக்கட்டு காளைகள்!
ADDED : மார் 31, 2024 12:57 AM

'துள்ளிக்குதித்து ஓடும் ஜல்லிக்கட்டு காளைகளை, ஓவியமாக வரைவது எனக்கு பிடித்தமான ஒன்று,'' என்கிறார் ஓவியர் சிவபாலன்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓவியர் சிவபாலன். ஒவியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 15 ஆண்டுகளாக முழு நேர பணியாக ஓவியங்கள் வரைந்து வருகிறார்.
சமீபத்தில், கோவை கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் இவரது ஓவிய கண்காட்சி நடந்தது.
''நான் 10 ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து, ஒவியம் வரைந்து வருகிறேன். 12ம் வகுப்பு முடித்ததும் ஓவியக்கல்லுாரியில் சேர்ந்து ஒவியங்களை முறையாக கற்றுக்கொண்டேன்.
வாட்டர் கலர், அக்ரலிக் மற்றும் ஆயில் வண்ணங்களில் வரைந்து வருகிறேன்,''
''ஓவியத்தில் எந்த வகை பேவரைட்?''
''ஓவியங்களில் பல வகைகள், ஸ்டைல்கள் உள்ளன. எனக்கு இயற்கையை வரைவதில் ஆர்வம் உண்டு என்றாலும், தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டு கலை மற்றும் கலாசாரத்தை ஓவியங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதில்தான், ஆர்வம் அதிகம்.
அதில் குறிப்பாக, துள்ளிக்குதித்து ஓடும் ஜல்லிக்கட்டு காளைகளை ஓவியமாக வரைவது, எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களுக்கு சென்று நேரடியாக பார்த்து ரசித்து பாய்ந்து செல்லும் காளைகளின் உடல் மொழியை, பல கோணங்களில் வரைந்து இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது, எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது,''
''உங்கள் தாவணி ஓவியங்களை எல்லோரும் ரசிக்கிறார்களே...,''
''ஆமாம்... புடவை மற்றும் பாவாடை தாவணி உடையில், தலையில் பூ வைத்திருக்கும் பெண்களின் ஓவியங்களை, பல கோணங்களில் வரைந்து இருக்கிறேன்.
''இது சார்ந்த தனித்துவமான ஒரு ஓவிய கண்காட்சியை நடத்த இருக்கிறேன்,''
கோவில் திருவிழாக்களுக்கு சென்று, அந்த விழா நடக்கும் பண்பாட்டு நிகழ்வுகளை தேரோட்டம், கலை நிகழ்ச்சிகளையும் வரைந்து காட்சிப்படுத்துவதில் அலாதி ஆனந்தம் சிவபாலனுக்கு!

