தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ஓய்வுக்கு பின் ஒரு 'பி.டி.உஷா'

ஓய்வுக்கு பின் ஒரு 'பி.டி.உஷா'

ஓய்வுக்கு பின் ஒரு 'பி.டி.உஷா'


ADDED : மார் 15, 2026 08:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 08:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓடி ஆடும் கால்களும், பாடித்திரியும் பறவைகளும் ஓய்வறிவதில்லை. உடல் இயலாத நிலையிலும் தன் முயற்சியால் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தும் மனிதர்களை மாணிக்கங்கள் என சொல்லலாம். அவர்கள் தான் இன்றைய இளம் தலைமுறைக்கும், நாளைய 'ஜென்-இசட்' தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த முத்தமிழ்செல்வி பற்றி அறிய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு பணியாளரான இவர் 65 பிளஸ் வயதுக்கு பின்னும் மாநில, தேசிய தடகளப் போட்டிகளில் பதக்கங்கள், பரிசுகள் பெற்று கவனம் ஈர்க்கிறார்.

ஓய்வுக்கு பின்னும் ஒரு பி.டி.உஷாவாக ஓடுகிறாரே என பாராட்டப்படும் இவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...

விளையாட்டு ஆசிரியை ஆக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக தான் பி.ஏ., படித்தேன். குடும்பச்சூழலால் திருமணம், வேலை என்ற வட்டத்துக்குள் நுழைந்தேன். 1981ல் 115 ரூபாய் சம்பளத்துக்கு அங்கன்வாடி பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும் விளையாட்டு மீதான ஆர்வம் எனக்கு குறையவில்லை.

அதை கைவிடாமல் மாவட்ட அளவில் அரசுத்துறை பணியாளர்கள், ஊழியர்களுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வேட்கைக்கு தீனி போட்டுக்கொண்டேன். 2013ல் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மாநில ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றேன். தொடர்ந்து தலா 4 மாநில, தேசியப்போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அள்ளினேன்.

ஒவ்வொரு முறை போட்டிக்கு செல்லும்போதும் என்னை வாழ்த்தி அனுப்பும் முதல் நபர் கணவர் பழனிசாமி. அவர் மெக்கானிக்காக வேலை செய்தார். சமீ பத்தில் ஏற்பட்ட அவரின் இழப்பு என்னால் தாங்க முடியாத துயரம். அந்த சமயத்தில் திருவனந்தபுரத்தில் தேசிய மூத்தோர் தடகள விளையாட்டில் கணவரின் நினைவாக பங்கேற்று 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றேன். ஆரம்பம் முதல் இன்று வரை என் தேவை, செலவுகளை வருமானத்திலிருந்து சமாளிக்கிறே ன்.

அங்கன்வாடி பணியாளராக இருந்து படிப்படியாக முழு நேர அரசுப் பணியாளராக பதவி உயர்வு பெற்று சமூக நல விரிவாக்க அலுவலராக குஜிலியம்பாறை யூனியனில் வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். ஓய்வூதியத்தில் செலவுகளை கவனிக்கிறேன்.

இந்நிலையில் உலக மூத்தோர் தடகளப் போட்டி வடகொரியாவில் நடக்க உள்ளது. அதற்கு தகுதி பெற்றும் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளேன். அவ்வளவு துாரம் செல்ல வசதி இல்லை. இதுவரை பயிற்சிகள் எடுத்ததில்லை. வேர்வை சொட்ட, தினசரி மாடிப்படி ஏறி இறங்குவதும், சைக்கிள் ஓட்டுவதுமே நான் எடுக்கும் பயிற்சி.

அளவான அசைவம், விரும்பிய காய்கறி, சைவ உணவு இதுதான் என் மெனு. அதனால் சுகர், பிரஷர் எதற்கும் மாத்திரை எடுக்கும் வழக்கம் இல்லை. உறவுக்கு உறவாக, ஆறுதலாக இப்போது என்னை உற்சாகப்படுத்தி போட்டிக்கு வழியனுப்புவது என் மகன் தான். குடும்பத்தின் அரவணைப்பும், அனுசரிப்பும் இருப்பதால் இன்னும் நிறைய போட்டிகளில் பங்கு பெற்று சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us