sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/நம் உடலோடு உரையாடுகிறோமா - கேட்கிறார் அம்பாள் ஆர்.முத்துமணி

நம் உடலோடு உரையாடுகிறோமா - கேட்கிறார் அம்பாள் ஆர்.முத்துமணி

நம் உடலோடு உரையாடுகிறோமா - கேட்கிறார் அம்பாள் ஆர்.முத்துமணி


ADDED : மார் 15, 2026 08:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 08:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கைப் பயணத்தில் நாம் எத்தனையோ மனிதர்களோடும், வெளியுலகத்தோடும் உரையாடுகிறோம். ஆனால் நம்முடனேயே இருக்கும் நம் உடலோடு உரையாடுகிறோமா என்ற கேள்வியை முன் வைக்கிறார் 71 வயதிலும் இளமைமாறா ஆரோக்கியத்துடன் திகழும் விருதுநகர் தொழிலதிபரும், எழுத்தாளருமான அம்பாள் ஆர்.முத்துமணி.

தனது அனுபவங்களின் சாறாக இவர் படைத்துள்ள 'உடலோடு ஒரு உரையாடல்', 'காலச் சித்திரங்கள்' நுால்கள் இன்றைய அவசர உலகிற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இவர் கூறியதாவது....

​எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்தாலும், எத்தனை சொகுசு கார்களில் பயணித்தாலும், பிறப்பு முதல் இறப்பு வரை நாம் நிரந்தரமாக வசிக்கும் ஒரே வீடு நம் உடல் தான். உடல் தளர்வடையும் போது, முதுமை எட்டிப்பார்க்கும் போதுதான் அதன் அருமை நமக்குத் தெரிகிறது. ​நம் உடல் நம்மிடம் எப்போதும் மவுனமாகப் பேசிக் கொண்டே இருக்கிறது. தாகம், பசி, வலி என அது காட்டும் சிக்னல்களை உணர்ந்து, செயல்படுவதே ஆரோக்கியமான வாழ்வின் திறவுகோல்.

60 வயதுக்கு பின் தீவிர வாசிப்பில் இறங்கினேன். மேலோட்டமாகப் புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும், ஒவ்வொரு வரியிலும் உள்ள உட்பொருளை ஆழமாக கவனித்து வாசிக்க வேண்டும் என உணர்ந்தேன். ஆழ்ந்த வாசிப்பு மனிதனுக்குத் தெளிவு, அமைதி, மனநிறைவை வழங்கும்.

எனது மற்றொரு படைப்பான 'காலச் சித்திரங்கள்' புத்தகம், கடந்த காலத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. ​1960களில் இருந்த தகவல் தொடர்பு சவால்களை நினைவு கூர்கிறேன். வெளியூர் சென்றவர்களுடன் தொடர்பு கொள்ள 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தச் சூழலிலும், கப்பல் ஏறி வெளிநாடு சென்று இயந்திரங்களை வாங்கி வந்து தொழில் செய்த முன்னோர்களின் துணிச்சலை வியக்கிறேன். இதை சுவாரசியமான புனைவுகளாக எழுதி உள்ளேன்.

7 வயது சிறுவனாக இருந்தபோது தாத்தாவின் மரணத்தை பார்த்த அனுபவத்தை பதிவு செய்துள்ளேன். ஒரு குழந்தையின் பார்வையில் மரணம், அக்கால மருத்துவ விழிப்புணர்வு இன்மை, தவறான பழக்கவழக்கங்கள் உடல்நலத்தைக் கெடுத்தன என்பதை எழுதி உள்ளேன்.

​பாரம்பரிய உணவு முறைகளே உடலுக்கு வலுசேர்க்கும். மருந்து மாத்திரைகளால் ஆரோக்கியத்தை பெற முடியாது. சரியான உணவு, உறக்கம்,​ மனத்தெளிவு, ​உடலின் 'சிக்னல்களை' உணர்தல் ஆகியவையே ஆரோக்கியத்தின் அடிப்படைத் துாண்கள். இந்த வயதிலும் சுறுசுறுப்பிற்கு உடலோடு நான் கொண்டுள்ள இணக்கமான உறவே அடிப்படை.

அடுத்து விருதுநகர் வியாபாரிகளின் சிறப்புகளை கூறும் 'விருதை வணிகரின் மாண்பு' புத்தகத்தை எழுதி வருகிறேன். இதில் எந்தளவு ஒற்றுமையோடு விருதுநகர் வியாபாரிகள் செயல்பட்டு வியாபாரத்தில் தனித்துவம் பெற்றனர் என விளக்குகிறேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us