/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
அரிசிப்பால் சோப் தெரியுமா: பாரம்பரிய சோப் தயாரிப்பில் ஆர்க்கிடெக்ட்
/
அரிசிப்பால் சோப் தெரியுமா: பாரம்பரிய சோப் தயாரிப்பில் ஆர்க்கிடெக்ட்
அரிசிப்பால் சோப் தெரியுமா: பாரம்பரிய சோப் தயாரிப்பில் ஆர்க்கிடெக்ட்
அரிசிப்பால் சோப் தெரியுமா: பாரம்பரிய சோப் தயாரிப்பில் ஆர்க்கிடெக்ட்
ADDED : ஏப் 28, 2024 10:59 AM

எத்தனையோ பிராண்ட்களில் அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் குவிந்தாலும் இன்னமும் பாரம்பரிய பொருட்களுக்கான வரவேற்பு குறையவில்லை. அதனால் தான் பாரம்பரிய குளியல் சோப் தயாரிப்பில் ஈடுபட்டேன் என்கிறார் மதுரை சதாசிவநகரைச் சேர்ந்த நிவேதா.
ஆர்க்கிடெக்ட் முடித்து தொழிலில் ஈடுபட்டாலும் பெண்களுக்கான அடிப்படை சோப்பு விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என்பதற்காக சோப் தயாரிக்கிறேன் எனஆரம்பித்தார்.
பி.ஆர்க் முடித்த கையோடு வேலை கிடைத்தது. கொரோனா தொற்றால் உடனடியாக வேலையில் சேர முடியவில்லை. அப்பா சவுந்தரராஜன் சிவில் இன்ஜினியர் என்பதால் அவருடன் தொழிலை கவனித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் பாரம்பரிய சோப் தயாரிக்க கற்றுக் கொண்டேன். என் குடும்பத்தினருக்கு குளியல் சோப்களை ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப தனித்தனியாக தயாரித்து கொடுத்தேன். வீட்டினரின் உற்சாகம் என்னை சுயமாக தொழில் செய்ய ஊக்கப்படுத்தியது.
கணவர் சந்தோஷ் ஸ்ரீ வத்சனும் ஆர்க்கிடெக்ட் படித்தவர் என்பதால் இரண்டு பேரும் சேர்ந்து பாரம்பரிய கட்டடக்கலை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம். சிமென்ட் பூச்சு, பெயின்ட் பூச்சு இன்றி வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள பாரம்பரிய கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நான் மட்டும் தனியாக செய்த சோப் தயாரிப்பை மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையில் உள்ள சில பெண்களுக்கு கற்றுக் கொடுத்தேன்.
எல்லோருமே ஒரே வகையான சோப்பை உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். ஆனால் முகத்தைப் பொறுத்தவரை எண்ணெய்ப்பசை, வறண்ட சருமம், இயல்பான சருமம் என மாறுபடும். அதற்கேற்ப தயாரித்த சோப்பை பயன்படுத்தினால் தான் முகம் பளபளக்கும். எண்ணெய்ப் பசையுள்ளவர்களுக்கு கரித்துாள், எண்ணெய் கலந்து சோப் தயாரிக்கிறோம். தேங்காய் எண்ணெய், சன் பிளவர், வேப்பெண்ணெய் என ஒவ்வொரு சோப்புக்கும் எண்ணெய் சேர்க்கும் விகிதம் மாறும்.
வறண்ட சருமத்தினருக்கு பால், தேன் கலந்த சோப் நன்றாக இருக்கும். வெயிலில் அதிகமாக அலைபவர்களுக்கு முகத்தில் ஆங்காங்கே கருமை நிறம் படிந்திருக்கும். இதை நீக்குவதற்கு பப்பாளி சாறு, தக்காளி ஜூஸ் கலந்து சோப் தயாரிக்கிறோம். தொடர்ந்து பயன்படுத்தும் போது முகத்தில் செயற்கையாக ஏற்பட்ட கருமை நீங்கும். ஆலோ நீம் சோப்பில் கற்றாழை, வேப்பெண்ணெய் கலந்திருப்பதால் முகப்பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த சோப் நன்றாக இருக்கும். பெப்பர் மின்ட் எண்ணெய் இருப்பதால் குளிக்கும் போதே வாசனையாக இருக்கும்.
குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஒரே சோப் தான். அரிசியை அரைத்து பால் எடுத்து அதில் எண்ணெய் கலந்து தயாரிக்கும் சோப்பால் குழந்தைகளின் சருமம் பட்டுப்போல் மின்னும். இதில் வாசனை இருக்காது.
முகத்தில் பூசும் கிரீம் 4 மணி நேரமாவது முகத்தில் இருக்கும். ஆனால் 30 வினாடிகள் முகத்தில் சோப் தேய்த்தால் அந்த பொலிவை கிடைக்கச் செய்ய வேண்டும் என முயற்சி செய்து வென்றிருக்கிறேன். அதற்காகவே மணம் என்று பெயரிட்டு பெருமைப்படுத்துகிறோம் என்றார்.
இவரிடம் பேச:63855 60061

