தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம்: துணை இயக்குனர் அறிவிப்பு

 தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம்: துணை இயக்குனர் அறிவிப்பு

 தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம்: துணை இயக்குனர் அறிவிப்பு


ADDED : நவ 30, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 925 எக்டேரில் தென்னை மரங்கள் சாகுபடியாகிறது. தென்னை மர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2000 மரங்களுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது.

4 முதல் 15 வயது உள்ள மரம் ஒன்றுக்கு ரூ.2.25 பிரீமியத் தொகை செலுத்தினால் பேரிடர், நோய் தாக்குதலால் இழப்பு நேரும் போது ரூ.900 வழங்கப்படும். 16 முதல் 60 வயதுள்ள மரத்திற்கு ரூ.3.50 செலுத்தினால் இழப் பீடாக ரூ.1750 வழங்கப்படும்.

நெட்டை, குட்டை என ரகங்களுக்கு ஏற்ப வயதுக்கான பிரீமியத்தொகை நிர்ணயிக்கப் படும். குறைந்தது 10 மரங் களுக்கு காப்பீடு செய்யலாம். அதிகபட்சம் வரம்பில்லை.

தோட்டத்தில் உள்ள தென்னை மரங் களுக்கு பெயின்ட் மூலம் வரிசை எண் எழுதியிருக்க வேண்டும். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us