தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ கவிதைகளாக மாறிய உயிர் அச்ச நாட்கள்

 கவிதைகளாக மாறிய உயிர் அச்ச நாட்கள்

 கவிதைகளாக மாறிய உயிர் அச்ச நாட்கள்


ADDED : மார் 08, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தை மையமாக வைத்து கவிஞர் பொன் இளவேனில் எழுதிய 'மெய்யுறுதல்' கவிதை நுால் குறித்து, எழுத்தாளர் இளஞ்சேரல் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

உலக மக்கள் அனைவரையும் பீதியில் உறைய வைத்த கொரோனா தொற்று நோய் காலத்தை, யாரும் மறந்து விட முடியாது. மூடப்பட்ட வீதிகளில், வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு உயிரச்சத்துடன் வாழ்ந்த நாட்கள் அவை.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஓவியம் வரைதல் என, மக்கள் செய்ய மறந்த பல நல்ல விஷயங்களை உயர் பயத்தில் செய்து கொண்டிருந்த காலம் அது.

கவிஞர் இளவேனில், இந்த சூழலை 'மெய்யுறுதல்' என்ற தலைப்பில் 200 பக்கங்கள் கொண்ட ஒரு கவிதை தொகுப்பை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

கொரோன தொற்று காலத்தை தமிழில் கவிதையில் பதிவு செய்த முதல் நுால் இது. கொரோனா தாக்கம் குறைந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட சில வாரங்களில் இந்த நுால் வெளி வந்து விட்டது.

மருத்துவமனைகளும், சவக்கிடங்குகளும் சரி சமமாக நிரம்பி இருந்தன. ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், உற்றார் உறவினர் யாரும் இல்லாமல் சடலங்கள் சவக்குழிக்குள் தள்ளப்பட்டன. இறுதி சடங்குகள் கூட இல்லாத, இறப்புகளை, வலி மிகுந்த வரிகளில் கவிதைகளாக்கி இருக்கிறார் கவிஞர் இளவேனில்.

புலம் பெயர்ந்து பிழைப்பு தேடி வந்த வெளி மாநில மக்கள், கால்நடையாக பாதங்களில் ரத்தம் கசிய நடந்து ஊர் சென்ற பரிதாபங்களையும், இருள் மண்டி இருந்த எதிர் காலத்தையும் இலக்கியமாக்கி இருக்கிறார்.

மருத்துவமனைகளும், சவக்கிடங்குகளும் சரி சமமாக நிரம்பி இருந்தன. ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், உற்றார் உறவினர் யாரும் இல்லாமல் சடலங்கள் சவக்குழிக்குள் தள்ளப்பட்டன. இறுதி சடங்குகள் கூட இல்லாத, இறப்புகளை, வலி மிகுந்த வரிகளில் கவிதைகளாக்கி இருக்கிறார் கவிஞர் இளவேனில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us