sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

குழந்தைகள் அலைபேசிக்கு அடிமையாவதை தடுக்க வழி விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் அர்பிதா

/

குழந்தைகள் அலைபேசிக்கு அடிமையாவதை தடுக்க வழி விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் அர்பிதா

குழந்தைகள் அலைபேசிக்கு அடிமையாவதை தடுக்க வழி விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் அர்பிதா

குழந்தைகள் அலைபேசிக்கு அடிமையாவதை தடுக்க வழி விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் அர்பிதா

1


ADDED : அக் 27, 2024 10:54 AM

Google News

ADDED : அக் 27, 2024 10:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக சுகாதார நிறுவனம் 2022ல் வெளியிட்ட அறிக்கையில் சீனாவிற்கு அடுத்து 2030ல் இந்தியாவில் 10 குழந்தைகளில் ஒருவர் உடல் பருமன் ஏற்பட்டு ஆரோக்கியம் இன்றி வாழ வேண்டிய நிலை ஏற்படும், என தெரிவித்துள்ளது. இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் உடல்பருமனை எப்படி தவிர்க்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை துறையில் முதுநிலை பட்டம் பெற்ற பெங்களூரை சேர்ந்த டாக்டர் அர்பிதா.

இவர் தேனி போலீஸ் எஸ்.பி., சிவபிரசாத்தின் மனைவி. தற்போது தேனியில் வசிக்கிறார். பெங்களூரு, மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள், குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் உடல் பருமனுக்கான தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தினமலர் 'சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக அவர் கூறியதாவது: ஒருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை 'பாடி மாஸ் இன்டக்ஸ்' மூலம் அறியலாம். சராசரி சதவீதம் 95க்கு மேல் சென்றால், அதீத உடல் பருமனாக கருதி பாதிப்பை கண்டறிவோம். குறிப்பிட்ட வயதினருக்கு என தனி அளவு கிடையாது. உயரத்திற்கு ஏற்ற எடை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

பள்ளிக் குழந்தைகள் உணவுகளில் கலோரி அதிகமாக இருப்பதும், அதை எரிப்பதற்கு உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது, எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதும், அலைபேசி பார்த்துக் கொண்டே சாப்பிடுவதும் உடல் பருமனுக்கு காரணங்கள். மரபியல் ரீதியான பாதிப்பும் உண்டு.

அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்திய குழந்தைகள் இப்பிரச்னையில் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாணவர்கள், வளரிளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

சமூக பாதிப்பு


பள்ளி, கல்லுாரிகளில் உடல் பருமனானவர்களை சக மாணவர்கள் கேலி செய்வர். இதனால் கற்றல் திறன், தன்னம்பிக்கை குறையும். மன அழுத்தம், கவலை, பயம் கலந்த உணர்வு மேலோங்கும். இவ்வகை பாதிப்பு சமூகம் மற்றும் புறச்சூழ்நிலையால் ஏற்படும். உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரித்து இதய பிரச்னை, பக்கவாதம் ஏற்படும்.

எனக்கு தெரிந்த தரவுகளின் படி சிறுநீரக செயலிழப்பு பாதிப்பில், உடல்பருமன் உள்ளவர்கள் அதிகம். டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, அடிவயிற்றில் அதிக தசை வளர்ச்சி அதிகரிப்பது உள்ளிட்ட பாதிப்புகளை வளர்சிதை மாற்ற பாதிப்புகள் எனக் கூறலாம். ஆக உடல்பருமன் பாதிப்பு வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இதயம், சிறுநீரக கோளாறுகளை எளிதாக ஏற்படுத்திவிடும்.

என்ன செய்ய வேண்டும்


இப்பாதிப்பை தவிர்க்க 'ஜங்க் புட்' சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்கள் ஒரு 'கப்' காய்கறி, ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. சிறுதானியங்களில் புரதம், நார், இரும்புச் சத்துக்கள் உள்ளன. அதை வித்தியாசமாக சமைத்து, பெற்றோர் வழங்குவது அவசியம்.

வாரத்திற்கு 4 நாட்கள் ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது என தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது கட்டாயம். அலைபேசி பார்த்துக்கொண்டே இருக்கும் ('ஸ்கிரீன் அடிக் ஷன்') பழக்கத்தை முற்றிலும் குறைக்க வேண்டும். 'ஸ்கிரீன் அடிக் ஷன்' ஆகும் குழந்தைகளை காப்பாற்ற, அவர்களோடு நேரத்தை செலவிட்டு பெற்றோர் விளையாட வேண்டும்.

குழந்தைகள் வெளியே விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். சிறுவர்களின் ரோல் மாடல் பெற்றோர் தான். குழந்தைகள் நல்ல விஷயங்கள் கற்றுக் கொண்டால் ஊக்கப்படுத்த வேண்டும். உடல் பருமன் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பள்ளிகளில் விளையாட்டு பாடவேளைகளில் வேறு பாட வகுப்புகளை நடத்துவதை நிறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us