sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

 பெண்களின் வாட்டம் போக்கும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அசாதாரண சாதனை

/

 பெண்களின் வாட்டம் போக்கும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அசாதாரண சாதனை

 பெண்களின் வாட்டம் போக்கும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அசாதாரண சாதனை

 பெண்களின் வாட்டம் போக்கும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அசாதாரண சாதனை


UPDATED : மார் 08, 2026 06:29 AM

ADDED : மார் 08, 2026 05:34 AM

Google News

UPDATED : மார் 08, 2026 06:29 AM ADDED : மார் 08, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தேர்ந்தெடுத்த துறையில் சாதனையாளராக வலம் வருவோர் சிலர். அந்த வரிசையில் திருப்பூர், தாராபுரம் சாலை, சாஸ்திரி நகரைச் சேர்ந்த ேஹமவர்ஷினியும் இணைந்திருக்கிறார். அவரது தந்தை ஜெயராஜ்; வர்த்தகம் செய்கிறார்.

தாயார் நிர்மலா; பார்மஸிஸ்ட். இவர்களது மூத்த மகள் தான் ஹேமவர்ஷினி.உணவு கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான அவர், தான் தேர்ந்தெடுத்த துறையில், வெறும் ஆலோசனை வழங்கு பவராக மட்டும் அல்லாமல், அதை, தனது அன்றாட வாழ் வியல் முறையிலும் பின்பற்றி வருகிறார். அவரது உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமை, கின்னஸ் சாதனை புத்தகத்தின் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது என்பது தான், ஹைலைட்'.

தலைகீழாக நின்று, தனது கைகளில், 50.9 கிலோ எடையை வைத்து, 13 நொடிகள் தாங்கி பிடித்திருக்கிறார். அந்த எடை முழுவதையும் அவரது தலை தான் தாங்கிப்பிடித்தது. இந்த வியப்புக்குரிய சாதனையை அங்கீகரித்து தான், கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பிடித்திருக்கிறது; அதற்கான சான்றிதழும் பெற்றிருக்கிறார். தற்போது, பெண் தொழிலதிபர்கள் மற்றும் பலருக்கு தனிப்பட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராகவும், உடற்பயிற்சி உள வியல் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.



தனது சாதனைப் பயணம் குறித்து ஹேமவர்ஷனி கூறியதாவது:

எனக்கு சிறு வயது முதலே ஆரோக்கியமான வாழ்வு, வலிமையான உடல் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது; எனக்கு 'ரோல் மாடல்' என் பெற்றோர் தான். அவர்கள் மேற்கொண்ட தனிப்பட்ட பயிற்சியும், உடல்நலன் மீது அவர்கள் காட்டிய அக்கறையும் தான் என்னை உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து படிப்பை படிக்கவும், அத்துறையில் முதுகலை பட்டம் பெறவும் ஊக்குவித்தது.

இன்றைய நாகரிக உலகில், பெண்கள், தங்களது பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். பின், குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்ததும், உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்துக் கொள்கின்றனர். அதற்கேற்றாற் போல், பெண்கள் உடல் உழைப்பை செலுத்த வேண்டிய வேலைகளுக்கு தனித்தனியாக இயந்திரங்களும் வந்து விட்டன.

இதனால் தான், ஆரோக்கியமான ஊட்டச்சத்து இல்லாமல், பெண்கள் பலரும் சத்து குறைபாடுடன் உள்ளனர். பெண்கள் இவ்வாறு இருப்பது, அவர்களை மட்டுமின்றி, அவர்களது தலைமுறையினரையும் பாதிக்கும் என்பதால் தான், உடற் பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் என, அறிவுறுத்தி வருகிறேன்.

இந்த விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தான், தலையில் எடை தாங்கி, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us