sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

 தங்க மகன்... தசைநார் வீரன் 

/

 தங்க மகன்... தசைநார் வீரன் 

 தங்க மகன்... தசைநார் வீரன் 

 தங்க மகன்... தசைநார் வீரன் 


UPDATED : பிப் 22, 2026 11:22 AM

ADDED : பிப் 22, 2026 06:29 AM

Google News

UPDATED : பிப் 22, 2026 11:22 AM ADDED : பிப் 22, 2026 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரை சேர்ந்த, 56 வயது 'இளைஞர்' முத்துவேல், தெலுங்கானா மாநிலம், வாராங்கல், கரீம் நகரில் நடந்த 16வது ஜூனியர் மாஸ்டர் ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இடுவாயில் வசிக்கும் இவர், செல்லம் நகரில் 'ஜிம்' வைத்திருக்கிறார். தன் கட்டுமஸ்தான உடற்கட்டை பல்வேறு 'ஸ்டைல்'களில் காண்பித்த அவர், நம்மிடம் பகிர்ந்துகொண்டவை:

சின்ன வயசுல, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு படங்களை நிறைய பார்ப்பேன். அவரோட உடற்கட்டை பார்த்து வியந்து போவேன். அவரை போல நாமும் 'பாடி பில்டர்' ஆகணும்ன்னு ஆசைப்பட்டு, என், 26வது வயசுல, 1996ம் வருஷத்தில் இருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். 'மிஸ்டர் வேர்ல்டு' பட்டம் பெற்ற ஜெயராமன் தான் என் குருநாதர்.அடுத்த ஒரு வருஷத்துல இருந்தே ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அளவில் நடந்த போட்டிகள்ல பங்கெடுக்க துவங்கினேன். பின், மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து, 10 சிறந்த வீரர்களின் வரிசையில் இடம் பிடித்தேன். 6வது இடம், 5வது இடம் என ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்து படிப்படியா முன்னேறினேன். 2000ம் ஆண்டில் தான், மாநில அளவிலான போட்டியில், 3ம் இடம் பிடிக்க முடிந்தது. அந்த வருஷம் சின்னதா ஒரு 'ஜிம்' வைச்சு, பசங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதன் முறையா எங்க 'ஜிம்' தான், சாம்பியன் பட்டம் வாங்கினாங்க.

வெறும் தசையல்ல... தங்கம்


2005ல், மும்பை, கோல்கட்டா, சேலம், கேரளா, போபாலில் நடந்த 'மிஸ்டர் இந்தியா' போட்டிகளில் பங்கேற்றேன்; ஆனா, வெள்ளி, வெண்கலம் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது. தங்கம் வெல்ல முடியல. இருப்பினும், விடா முயற்சியால், தெலுங்கானாவில் நடந்த 'மிஸ்டர் இந்தியா' போட்டியில் தங்கம் வென்றேன். அடுத்து, வெளிநாடுகள்ல நடக்கிற போட்டிகள்ல பங்கெடுத்து, இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தரணும்ங்கறது தான் என்னோட கனவு.இனி, வெளிநாடுகள்ல நடக்கிற போட்டிகளில் பங்கெடுக்கும் தகுதி கிடைச்சுருக்கு.

உலகளவில் நடக்கிற போட்டிகள்ல பங்கெடுக்கிற 'பாடி பில்டர்' களோடு போட்டி போடற அளவுக்கு உடற்கட்டு இருக்கணும்னா, கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இருக்கணும்; மாசத்துக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்; நிறைய பயண செலவு இருக்கு. ஆனா, அந்தளவுக்கு என்கிட்ட பண வசதி இல்லை. தமிழக அரசு எனக்கு உதவி செஞ்சா, நிச்சயமா என்னால உலகளவில் நடக்கிற போட்டிகள்ல பங்கெடுத்து இந்தியவுக்கும், தமிழ்நாடுக்கும் பெருமை தேடித்தர முடியும்.

தாள முடியாத சோதனை... தளராத சாதனை தனது சாதனை பயணத்தில், கடந்த, 2011ல், முத்துவேலின், 5 வயது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட, அவருக்கு வாய் பேச முடியாத, காது கேளாத நிலை ஏற்பட்டது; அவரது மருத்துவ சிசிச்சைக்கு, 7 லட்சம் ரூபாய் தேவை என மருத்துவர்கள் கூற, மனதளவிலும், உடல் அளவிலும் உடைந்து போனார் முத்துவேல். இருப்பினும், மாவட்ட அளவிலான ஒரு போட்டியை நடத்தி, தன் மகளின் மருத்துவ செலவுக்கு நித திரட்டினார்; நல் மனம் படைத்தோர் நன்கொடை வாரி வழங்கினர்; நிதியும் திரண்டது. தன் மகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்தார்; அவரும் குணமானார். தற்போது அவரது மகள், வேளாண் கல்லுாரியில் படித்து வருகிறார். இதனால், 8 ஆண்டுகள், அவரது 'பாடி பில்டிங்' பயணம் தொய்வடைந்த போதிலும், மீண்டும் பயிற்சியில் கவனம் செலுத்தி, சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.---








      Dinamalar
      Follow us