sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்

/

நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்

நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்

நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்


ADDED : நவ 09, 2025 08:41 AM

Google News

ADDED : நவ 09, 2025 08:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி விஷ்ணம்பேட்டை. இளங்கலை பொறியியல், ஐ.ஐ.எம்., ராய்ப்பூரில் எம்.பி.ஏ., பயின்றேன். தற்போது சென்னையில் பணி புரிகிறேன். அப்பா சிதம்பரம், விவசாயம் செய்கிறார். அம்மா ஸ்ரீமதி, பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.

சிறு வயதில் அக்ரஹாரத்தில் வளர்ந்தேன். மார்கழியில் தெரு முழுதும் அந்தந்த வீட்டு வாயில்களில் கோலமிடுவது வழக்கம். அம்மா நன்றாக கோலமிடுவார். அவருக்கு ஒத்தாசையாக இருந்த நான், 8 வயது முதல் கோலமிட ஆரம்பித்தேன். அப்படித்தான் கோலம் மீதான ஆர்வம் என்னுள் எழுந்தது.

எனக்குள் இருந்த ஓவியத் திறமையை கோலத்தில் வெளிப்படுத்த என் அம்மா ஊக்கப்படுத்தினார். ரங்கோலி உட்பட அனைத்து வகை கோலங்களை அவரிடமே கற்றுக் கொண்டேன். 'ரங்கோலியில் டிசைன் மட்டுமின்றி, கருத்துகள் நிறைந்ததாக வரைய முயற்சி செய்' என அறிவுறுத்தினார்.

மனதிற்கு நெருக்கமான கோலம் கடந்தாண்டு, திருப்பாவை 30 பாசுரங்களின் கருத்துகளை, 30 நாட்களும் ரங்கோலியாக வரைந்தேன். கோலங்களுடன் பாசுரங்களை பாடியும், பாட விரும்பியவர்களுடன் சேர்ந்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தேன். சமீபத்தில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களை, அதன் சிறப்புகளுடன் ரங்கோலியாக வரைந்தேன். இந்தாண்டு திருவெம்பாவை பாசுர கருத்துகளை வரைய திட்டமிட்டுள்ளேன்.

கின்னஸ் சாதனைகள் புரிய விருப்பமிருந்தாலும், கோலத்தில் நமது கலாசாரத்தை முழுமையாக காட்ட முடியும், அதை சாதனையாக செய்யலாமா என கவனம் செலுத்துகிறேன். இந்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு பாரம்பரியமிக்க இழைக்கோலம், நடுவில் கல்பவிருட்சம், சுற்றிலும் கலசங்கள், யானைகள், மணிகள், தாமரை என அத்தனை மங்கல பொருட்களுடனும் வரைந்திருந்தேன். என் மனதிற்கு நெருக்கமான கோலம் அது.

பொங்கல் பண்டிகை குறித்து, அதன் சிறப்பு, ஏன் கொண்டாடுகிறோம், அதிலுள்ள அறிவியல் விஷயங்கள் உள்ளிட்டவற்றை இழைக்கோலமாக வரைந்தேன். அதனை மத்திய அரசின் கலாசாரத்துறை, அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது ஊக்கமளித்தது.

திறமைக்கான தளம் முன்பு ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் விதமாக இருந்த மாக்கோலம், தற்போது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக பார்க்கப்படுகிறது. இழை, புள்ளி கோலங்களுக்கு இப்படித்தான் வரைய வேண்டும் என்ற இலக்கணம் உண்டு. ரங்கோலிக்கு அப்படியல்ல.

நான் இழை, ரங்கோலி கோலங்கள் வரைவதில் ஈடு படுகிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கு எழுந்துவிடுவேன். கோலத்தை பொறுத்து 2 முதல் 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்வேன். பணிச்சுமைக்கு நடுவில் நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும் கோலமிடுகிறேன். வீட்டு விசேஷங்கள், திருமண விழாக்களில் வரைந்து கொடுக்கிறேன். கேட்கிறவர்களுக்கு பயற்சிளிக்கிறேன்.

அதிகாலை எழுந்து அலைபேசியை தவிர்த்து 10 நிமிடம் மனதை ஒருமுகப்படுத்தி கோலமிட்டால் வாழ்வில் ஒழுக்கம் அதிகரிக்கும். கவனச்சிதறல் இன்றி செயல்களை நேர்த்தியுடன் செய்ய முடியும் என்றார்.






      Dinamalar
      Follow us